கடந்த 5 வருடங்களாக
தமிழ் நாட்டில் ”ப்ளெக்ஸ் கலாச்சாரம்” (Flex Culture) என்று சொல்லும் அளவிற்கு ப்ளெக்ஸ்
போர்டுகள் வைக்கப் படுகின்றன. முந்தைய நாட்களில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. அதுவும்
ஏதாவது ஒரு திருவிழா அல்லது மண விழா காலங்களில் மட்டும்.இப்போதுஏன் எதற்கு என்றே தெரியாமல்
ப்ளெக்ஸ் வைக்கப்படுகின்றது.
சமீபத்தில்
AirTel DTH with HD Dish வாங்கி விட்டேன். Recharge-ம் செய்தாகி விட்டது. அப்புறம்
என்ன ஒரே படம் தான். நான் சமீபத்தில் பார்த்த படங்களை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளப்
போகிறேன்.
இந்த கதை தோழி ஒருவர் சொல்லக் கேட்டது. நன்றாக இருந்ததினால் வாசகர்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். ஒரு நாட்டின் ராஜாவுக்கு அன்று பிறந்த நாள். ராஜா மந்திரிகளுடன் கலந்து
ஆலோசித்து, எனக்கு ஒரு மந்திரம் ஒன்று வேண்டும்.
சென்ற வாரம் திருவில்லிபுத்தூர் சென்று இருந்தேன். திருவில்லிபுத்தூர் என்றதும், புகழ் பெற்ற ஆண்டாள் கோவில் சிலருக்கு நினைவிற்கு வரலாம். மேலும், நம் தமிழக அரசின் முத்திரையில் உள்ளதும் இதே ஆண்டாள் கோவில்தான். அங்கு பார்த்த சில இடங்களின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
திருவில்லிபுத்தூர் – மார்க்கெட்: திருவில்லிபுத்தூரை சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. ஆகையால் திருவில்லிபுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் நீங்கள் விரும்பும் அத்தனை காய்கறிகளும் கிடைக்கின்றன.
திருவில்லிபுத்தூரை சுற்றிப் பார்க்கும் போது, கடை வீதிகளில் செல்லும் போது, பாத்திரக்கடைகளில் சில பொருட்களைப் பார்க்கும் போது நாம் எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையில் கிராமத்தினை விட்டு தள்ளி வந்து விட்டோம் என்று எண்ணத் தோன்றியது. அப்படிப்பட்ட சில பொருட்களின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
மேலும் கடைவீதியில் வரும் போது, ஒரு புட்டுக்கடையில் (புட்டு என்பது பச்சரிசி அல்லது கேழ்வரகு மாவில் செய்யப்படுகின்ற ஒரு உணவுப் பொருள்) புட்டு வாங்கி சாப்பிட்டேன். நல்ல சுவையுடன் இருந்தது. புட்டுவுடன் மேலே தேங்காய் பூ மற்றும் சீனி போட்டுத் தந்தார்கள். தேவாமிர்த சுவையாக இருந்தது…
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால் அனைத்தையும் கண்டு மற்றும் உண்டு வாருங்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி இன்னும் நிறைய விசயங்கள் உண்டு. அடுத்த முறை நான் செல்லும் போது இன்னும் பேசுவோம்…
Google பல புதுமையான வசதிகளை அதன் search பக்கத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. Google.com சென்று let it snow என்று type செய்து search பட்டனை அழுத்தவும். பிறகு பாருங்கள்….
அன்புள்ள வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு, இந்த ப்ளாக்கில் புதிதாக ஒரு பத்தி (Column) எழுதப் போகிறேன். இந்த column தலைப்பு “ஊர் சுற்றி”, இதில் நான் சென்ற ஊர்களைப் பற்றியும், அங்கு உள்ள இடங்கள் பற்றியும் தகவல்கள் இடம் பெறும். உங்கள் ஆதரவினை வேண்டுகிறேன்.
நான் எந்த நிகழ்ச்சியினை சொல்கிறேன் என்று தெரியும். ஏனோ எனக்கு சூர்யா கேள்வி கேட்கும் (நிகழ்ச்சியில் அல்ல, நிகழ்ச்சி பற்றிய விளம்பரத்தின்) போது எல்லாம் இது தான் தோன்றுகிறது “ ஏன் சூர்யா… இன்னுமா SMS மூலம் ஒரு கோடி கிடைக்கல?”.
வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! புத்தாண்டு “தானே” புயலாக, ஆரம்பித்து இருந்தாலும் எல்லார் வாழ்விலும் இவ்வாண்டு தென்றல் வீசும் என்று நம்புகிறேன்!