Wednesday, January 25, 2012

கதை-1

        


  இந்த கதை தோழி ஒருவர் சொல்லக் கேட்டது. நன்றாக இருந்ததினால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நாட்டின் ராஜாவுக்கு அன்று பிறந்த நாள். ராஜா மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து, எனக்கு ஒரு மந்திரம் ஒன்று வேண்டும். 



 அந்த மந்திரத்தினை வாசித்தால் போதும் என் துன்பம் என்னை விட்டு அகன்று விட வேண்டும் என்றானாம். மூத்த மதியுக மந்திரி ஒருவர், சிரித்துக் கொண்டே ஒரு துண்டு சீட்டில் ஒரு மந்திர வாசகம் எழுதி, மன்னனிடம் கொடுத்து, “மன்னா! இதோ நீங்கள் கேட்ட மந்திரம். ஆனால் இதனை இப்போது நீங்கள் படிக்கக் கூடாது. உங்களுக்கு எப்போது மிகப்பெரும் துன்பம் வருகிறோதோ அப்போது படியுங்கள். உங்கள் துன்பம் அகன்று விடும்” என்றாராம். ராஜாவும் மகிழ்வுடன் அந்த சீட்டினை வாங்கி தன் கைவிரல் வைர மோதிரத்தினுள் மடித்து வைத்துக் கொண்டாராம்.
      நாட்கள் சென்றன. ஒரு நாள், ராஜாவின் பக்கத்து நாட்டு மன்னன் ராஜாவை போரில் வென்று விட, ராஜா தோற்று காட்டில் தஞ்சம் புகுந்து மன உளைச்சலில் இருளில் நடந்து கொண்டிருந்தான். அப்போது, ராஜாவின் கையில் அணிந்திருந்த, வைர மோதிரம் ஒளிர்ந்தது. உடனே, ராஜாவுக்கு அந்த மந்திரத்தின் நினைவு வந்தது. மிகுந்த மன வருத்ததில் இருந்த ராஜா, அந்த மந்திரத்தினை வாசிக்கவும் சிரித்துக் கொண்டே மன தைரியத்தோடு நடந்து சென்றாராம். அந்த சீட்டில் மந்திரி எழுதிக் கொடுத்து இருந்த மந்திர வாக்கியம் மிகச் சிறியதுதான் அந்த வாக்கியம்: “இதுவும் கடந்து போகும்!”.  

No comments:

Post a Comment