Tuesday, January 11, 2011

தமிழ்(பட) ஜெராக்ஸ்

சமீபத்தில் ஒரு சில ஆங்கில படங்கள்
பார்த்தேன். அவற்றைப் பற்றி சில வரிகள்:
அந்தப் படங்களில் சில தமிழ் படங்களின் சாயல்கள் தெரிந்தது. எனது முதல் வரியின் எதிர்மறை கூட உண்மையாக இருக்கலாம்.
Mrs. DoubtFire (1993) – அவ்வை சண்முகி (1996)
Planes, Trains & Automobiles (1987) – அன்பே சிவம் (2003)
யாரைப் பார்த்து யார் ஜெராக்ஸ் அடிக்கிறார்கள் என்பதை வாசகர்களின்
முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஹைக்கூ

வழியெல்லாம் போதி மரங்கள்
ஒரு புத்தனையும்
காணவில்லை!

ஐபிஎல்

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை? இந்தியாவில் இவ்வளவு பணம் மற்றும் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் என்பதே இந்தப் போட்டியின் போதுதான் தெரிய வருகிறது. இன்று 2011-க்கான ஏலம் நடந்தது. கிரிக்கெட் வீரர்களின் காட்டில் மழைதான். அதிக பட்சமாக இந்திய வீரர் கெளதம் காம்ப்பீர் 11 கோடிக்கு விலை போனார்!. நம் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்கேயோ படித்தது:

வாழ்க்கை வசப்பட...
இன்னும் வாய்ப்புண்டு - முடிந்தவரை பாருங்கள்.
எதிர்ப்பவர் நம் மனிதர்தான் - முடிந்தவரை மோதுங்கள்.
எண்ணமே வாழ்வாகும் - நல்லதை எண்ணுங்கள்.
அனைத்தும் நாளை சரியாகும் - நம்பிக்கை கொள்ளுங்கள்.