Tuesday, December 27, 2011
சிக்கன் 65-ன் வரலாறு
சமீபத்தில் புகாரி உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். வாய்க்கு நல்ல உணவும், சில சுவையான தகவல்களும் கிடைத்தது. புகாரி உணவு விடுதி 1951 ஆம் ஆண்டு திரு A.M. புகாரி என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இந்த விடுதியின் கிளைகள் இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் Overseas நாடுகளில் உள்ளது. சென்னையில் அசோக் நகர் மற்றும் சாந்தி காலனி ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. மற்றும் ஒரு சுவையான தகவல் என்னவென்றால் சிக்கன் 65 என்று சொல்லப்படும் சுவையான சிக்கன் கறி -வகை திரு A.M. புகாரி அவர்களின் கண்டுபிடிப்பு ஆகும். 1965 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டதால் சிக்கன் 65 என்று அழைக்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் அந்த உணவு விடுதியின் மெனு கார்டில் முதல் பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது….
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment