Friday, November 11, 2011

கேட்டது

அரசு போக்குவரத்து துறை பற்றி…

இந்தப் பதிவு தேவையா?… இல்லையா?… எனக்கு தெரியவில்லை. ஆனால் அரசாங்க இயந்திரத்தின் ஒரு அச்சாணியாய் திகழும் போக்குவரத்து துறை பற்றி ஒரு Bus பயணத்தின் போது ஒரு நண்பருடன் அளவளாவ சந்தர்ப்பம் வாய்த்தது. நான் எனது சொந்த ஊருக்கு போய்க் கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த bus அது. நான் சந்தித்த அந்த நபருக்கு சுமார் 50 வயதுக்கு மேல் இருக்கும்.

என் பக்கத்தில் அமர்ந்த அவர் என்னுடன் பேச ஆரம்பித்ததும், நானும் பேச ஆரம்பித்தேன். பேச்சு அப்படியே போக்குவரத்து துறை பற்றி வந்தது. நான் போனது bus என்றாலும் கூட ஏதோ roller coaster-ல் போனது போன்று மயக்கம்தான் வந்தது. அதாவது அவர் போக்குவரத்து துறையின் முறைகேடு பற்றி பேச ஆரம்பித்தவுடன்.

  1. · போக்குவரத்து துறையில் நல்ல வருமானம் வந்த போது கூட போக்குவரத்து பணிமனையில் பேருந்தினைப் பராமரிக்க போதுமான அளவு ஊழியர்கள் இல்லை.
  2. · போக்குவரத்து துறையில் driver, conductor வேலைக்கு திறமையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பணம் மட்டும் போதும்!!! ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் வேறுபடுமாம்… J
  3. · இவ்வாறு வாங்கப் படும் லஞ்சம், சதவிகித அடிப்படையில் பிரித்துக் கொள்ளப் படுமாம்.
  4. · அது மட்டும் அல்ல போக்குவரத்து துறையின் உதிரி பாகம் வாங்குவதில்தான் அதிகாரியின் (லஞ்சம்) வாங்கும் சதவிகிதம் அதிகம். Quality பற்றி எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லையாம்.

ம்ம்ம்… என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை… என் நண்பர் என்று சொன்னேன் அல்லவா! அந்த நண்பர் வேறு யாருமல்ல அந்த பேருந்தின் நடத்துனர் (Conductor)!!!!!!!!.

எங்கே போய் நாம் முட்டிக் கொள்ள… :(