நம் ஊர் அரசியல்வாதிகளைப் பற்றி அதிகம்
சொல்ல தேவை இல்லை தான். சமீபத்தில் எனக்கு வந்த
குறுஞ்செய்தி இது:
நம் ஊர் அரசியல்வாதி ஓபாமாவை சந்திக்க
சென்றார்.
நம் ஊர் அரசியல்வாதி: உன் வீடு நல்லா இருக்கே! எப்படி கட்டின?
ஓபாமா: (ஓர் பாலத்தைக் காட்டி) அதோ பாலம் தெரியுதா? அந்த பாலத்தைக் கட்டும் போது ‘சுரண்டி’ வந்த பணத்தில் கட்டியது.
நம் ஊர் அரசியல்வாதி: ஓகோ!
(சிறிது நாள் கழித்து ஓபாமா இங்கு (நம் ஊர் அரசியல்வாதியின் வீட்டுக்கு) வருகிறார்)
ஓபாமா:உன் வீடு ரொம்ப நல்லா இருக்கே! எப்படி கட்டின?
நம் ஊர் அரசியல்வாதி: (கையை நீட்டி) அதோ பாலம் தெரியுதா?
ஓபாமா: இல்லையே!
நம் ஊர் அரசியல்வாதி: பாலத்தையே ‘சுரண்டி’ கட்டியது என் வீடு!
ஓபாமா:!!!!!!!