சமீபத்தில் மதுரை
வரை பஸ்ஸில் சென்றேன். விலைவாசி என்னை அதிகமாகப் பாதித்தது. பஸ் டிக்கட்டின் விலை
325 ரூபாய்!!!. அதுவும் SETC Ultra Deluxe.
சரிதான் பஸ் உள்ளே தொ(ல்)லைக்காட்சியாவது
இருக்கும் என்று உள்ளே போனால், வெறும் கண்ணாடி பெட்டிதான் இருந்தது. உள்ளே 2,3 தர்பூசணிப்
பழம்தான் இருந்தது. உபயம் ஓட்டுனரும், நடத்துனரும். ஒரு வழியாக பஸ்ஸில் உட்கார்ந்து,
பஸ்ஸும் புறப்பட்டு விட்டது. பஸ் புறப்பட்டதும் என் அருகில் இருந்த நண்பர் செல் போனில்
பேச ஆரம்பித்தார். அவர் பேசியதை வைத்துப் பார்த்தால், நண்பியுடன் பேசியதைப் போல் இருந்தது!!!.
நன்றாக சன்னல் ஓரமாக உட்கார்ந்து அயர்ந்து தூங்கி விட்டேன். இரவு சுமார் 1 மணி இருக்கும்,
பஸ்ஸை யாரோ வெளியில் நின்று கொண்டு பலமாகத் தட்டினார்கள். நல்ல சத்தம். நானும் விழித்து
எழுந்து பார்த்தால், பஸ் ஒரு சாலையோர சிற்றுண்டி விடுதியில் நின்று கொண்டிருந்தது.
இப்போது கதவை தட்டிய ஆசாமி சொல்வது நன்றாகக் காதில் விழுந்தது. “சார்! பஸ் ஒரு 10 நிமிசம்
நிக்கும்… டிபன், டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிட்டுக்குங்க”. இதே டயலாக்கை 4/5 முறை
பஸ்ஸைத் தட்டி, எல்லாரையும் எழுப்பிவிட்ட பின் அடுத்த பஸ்ஸை டார்கட் செய்ய சென்றான்.
அந்த Hotel பற்றி நான் அதிகம் சொல்லத் தேவை இல்லைதான். Maximum, பஸ்ஸில் நீண்ட தூரம்
செல்லும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவப் பட்டிருப்பார்கள். ஒரு தோசையின் விலை 40 முதல்
50 ரூபாய். வெளியே, 10 ரூபாய்க்கு விற்கும் Biscut பாக்கெட்டின் விலை 20 அல்லது
25. தலை சுற்றுகிறதா?. அதை விடக் கொடுமை, டாய்லெட். யாரும் வெட்ட வெளியே bathroom போக
முடியாது. நல்ல பழக்கம் தானே என்கிறீர்களா?.
அவர்கள் கட்டி
வைத்த High Tech டாய்லெட்டைத்தான் பயன்படுத்த
வேண்டும். இலவசமாக இல்லை. சிறுநீர் கழிக்க 3 ரூபாய்!!!. High Tech- என்கிற வார்த்தைக்கும்
அந்த டாய்லெட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. உள்ளே போனால் சிறுநீர் கூட வராது. அவ்வளவு
(துர்)மணம். அந்த இருட்டிலும் இருவர் “மச்சான்! எப்புடி… 3 ரூவா கொடுத்துட்டு 5 ரூவாய்க்கு
two bathroom போய்ட்டு வந்துட்டேன்ல…” என்று பேசிக்கொண்டு சென்றனர். ”2020-ல நாம வல்லரசு
தாண்டா” – நான் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். இதற்கிடையே ஒரு ‘நல்ல’ குடிமகன், பஸ்
பின்புறம் சிறுநீர் கழிக்க முயல, கப்பென்று பிடித்தது அவரை! Hotel security. ”என்ன
ஒரு செக்கியுரிட்டி ஓட்டலைச் சுற்றி!!. கவர்மெண்ட்லாம் இப்படி பண்ணினா ரோட்ல ஒரு பய
one bathroom போக மாட்டான்” என நினைத்துக் கொண்டேன். பசி வயிற்றைக் கிள்ள நானும் போய்
ஒரு சிப்ஸ் பாக்கெட்டை (அ)நியாய விலைக்கு வாங்கிக் கொண்டு சீட்டில் அமர்ந்தேன். அடுத்தடுத்த
பஸ்கள், hotel-லுக்குள் வர, அதில் இருந்த மக்களைப் பார்க்கும் போது சிரிப்புத்தான்
வந்தது… “எத்தனை பேர்டா ஒரு நாள்ல மாட்டுவீங்க!!!”.
No comments:
Post a Comment