Thursday, November 24, 2011

விழுந்தது அறை!

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சரத்பவாருக்கு பப்ளிக்கில் நல்ல பதிலடி கிடைத்திருக்கிறது. இந்த அறை ஏதோ ஒரு சாமானியனின் அடி மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்தியர்களின் அறை. நான் ஒன்றும் அறைந்த அந்த சகோதரனுக்கு வக்காளத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். “பாழாய் போன அரசியல்வாதிகளே! எங்களைப் பற்றி நினைக்கிறீர்களா? இல்லையா?” எனும் ஒரு கேள்வியாகக் கூட இந்நிகழ்வினை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்ளலாம். நன்றாக நினைத்துப் பாருங்கள் எத்தனை முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு?. எத்தனை ஆயிரம் கோடி ஊழல்? இதை எல்லாம் தட்டிக் கேட்க விழுந்த முதல் அடியாகக் கூட இதைப் பார்க்கலாம். அரசியல்வாதிகளே! சமீபத்தில் நடந்த ஆப்ரிக்க புரட்சி நினைவிருக்கிறதா? இந்நிகழ்வு பற்றி காந்தியவாதி அன்னா ஹசாரேவிடம் கேட்கப்பட்ட போது ஹசாராவே இப்படித்தான் கேட்டார் “Just One Slap?”.