மேலும், நம் தமிழக அரசின் முத்திரையில் உள்ளதும் இதே ஆண்டாள் கோவில்தான். அங்கு பார்த்த சில இடங்களின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
திருவில்லிபுத்தூர் – மார்க்கெட்:
திருவில்லிபுத்தூரை சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. ஆகையால் திருவில்லிபுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் நீங்கள் விரும்பும் அத்தனை காய்கறிகளும் கிடைக்கின்றன.








திருவில்லிபுத்தூரை சுற்றிப் பார்க்கும் போது, கடை வீதிகளில் செல்லும் போது, பாத்திரக்கடைகளில் சில பொருட்களைப் பார்க்கும் போது நாம் எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையில் கிராமத்தினை விட்டு தள்ளி வந்து விட்டோம் என்று எண்ணத் தோன்றியது. அப்படிப்பட்ட சில பொருட்களின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:






மேலும் கடைவீதியில் வரும் போது, ஒரு புட்டுக்கடையில் (புட்டு என்பது பச்சரிசி அல்லது கேழ்வரகு மாவில் செய்யப்படுகின்ற ஒரு உணவுப் பொருள்) புட்டு வாங்கி சாப்பிட்டேன். நல்ல சுவையுடன் இருந்தது. புட்டுவுடன் மேலே தேங்காய் பூ மற்றும் சீனி போட்டுத் தந்தார்கள். தேவாமிர்த சுவையாக இருந்தது…





ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால் அனைத்தையும் கண்டு மற்றும் உண்டு வாருங்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி இன்னும் நிறைய விசயங்கள் உண்டு. அடுத்த முறை நான் செல்லும் போது இன்னும் பேசுவோம்…