Thursday, December 29, 2011

மென்பொருள் - பதிவு

இந்த வலைப் பதிவில் எதனைப் பற்றியும் எழுதலாம். மென்பொருள் வல்லுனராக இருந்து கொண்டு எந்த மென்/வன் பொருள்களைப் பற்றியும் எழுதாமல் இருப்பது கஷ்டமே. அதனால்தான் இந்தப் பதிவு. சமீபத்தில் Google தேடுதலில் புதிதாக ஒரு வசதியினை அறிமுகப் படுத்தியுள்ளது. என்னவென்றால், நீங்கள் கம்ப்யூட்டர் முன் ஒரு சொல்லை சொன்னால் போதும் இப்போது Google உங்கள் சொல்லை உள்ளீடாகப் பெற்று, தேடுதலைத் தொடங்கும். ஆனால் இந்த வசதி chrome browser-ல் மட்டும் இப்போது உள்ளது. மேலும் தகவலுக்கு இந்த உரலியினை (http://www.google.com/insidesearch/voicesearch-chrome.html) தொடரவும்.மற்றும் ஒரு சுவையான தகவல் www.google.com சென்று askew என்று டைப் செய்யுங்கள்! தெரிந்து கொள்வீர்கள்…..