Sunday, January 30, 2011

ஹைக்கூ

ஓர் கவிதையே ஹைக்கூ சொல்கிறது
காதலியின் வார்த்தை!

Saturday, January 15, 2011

ஹைக்கூ

புத்தனாக போதி மரம் தேவை இல்லை.
போதும் என்ற மனம்தான் தேவை!.

படித்தவனும் அப்படித்தான்!

நான் என் அனுபவத்தில் கண்ட சில உண்மைச் சம்பவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு நான் Mr.X என்பவரிடம் பணியாற்றினேன். Mr.X பயங்கர புத்திசாலி. போதாதற்கு மாநில அரசாங்க உத்தியோகம் வேறு. (அதனைப் பெறுவதற்கும் பல தில்லாலங்கடி வேலை. அது தனிக் கதை). ஆகையால், வருமானத்திற்கும் குறைவில்லைதான். சக்கையாக பணியாட்களைப் பிழிந்து வேலை வாங்குவதில் கில்லாடி. அன்பரின் மனைவி கர்ப்பமாக இருந்தார். Mr.X எங்கோ ஒரு ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்க, அவரோ, ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி
அன்றுதான் நல்ல நாள் என்றும் சொல்லி விட, Mr.X ரொம்ப அப்செட். ஒன்றும் இல்லை, ஜோசியர் சொன்ன நாள், குடும்ப டாக்டர் பிரசவத்திற்கு குறித்த நாளுக்கு 3 நாட்கள் முன்னதாக. நம்மவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தாடி வளர்த்துக் கொண்டு, ஏதோ செத்தவன் போல் அலைந்தார். குடும்ப டாக்டரிடமும் போய் 3 நாட்கள் முன்னதாக சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்ட, அவரோ no dates என்று சொல்லவும், மனிதர் டோட்டல் அப்செட். புலம்ப ஆரம்பித்து விட்டார்.
பின்னர், ஒரு நாள் ஈவ்னிங், (ஜோசியர் சொன்ன அதே நாள்) மனைவியை அழைத்துக் கொண்டு (எங்கோ?) சென்றார். (நான் கூட செக்கப் செய்யத்தான் குடும்ப டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார் என நினைத்தேன்). சரியாக 3 மணி நேரம் நம்மவரிடம் இருந்து கழித்து போன் வந்தது. போனில் நம்மவர் நல்ல குஸி மூடில் பேசினார். அவர் சொன்ன விசயம் இதுதான் “குழந்தை பிறந்து விட்டது!”.

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்பான வாசகர்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள். அனைவரும் பொங்கல் திருநாளை நல்லதொரு நாளாக கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

Tuesday, January 11, 2011

தமிழ்(பட) ஜெராக்ஸ்

சமீபத்தில் ஒரு சில ஆங்கில படங்கள்
பார்த்தேன். அவற்றைப் பற்றி சில வரிகள்:
அந்தப் படங்களில் சில தமிழ் படங்களின் சாயல்கள் தெரிந்தது. எனது முதல் வரியின் எதிர்மறை கூட உண்மையாக இருக்கலாம்.
Mrs. DoubtFire (1993) – அவ்வை சண்முகி (1996)
Planes, Trains & Automobiles (1987) – அன்பே சிவம் (2003)
யாரைப் பார்த்து யார் ஜெராக்ஸ் அடிக்கிறார்கள் என்பதை வாசகர்களின்
முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஹைக்கூ

வழியெல்லாம் போதி மரங்கள்
ஒரு புத்தனையும்
காணவில்லை!

ஐபிஎல்

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை? இந்தியாவில் இவ்வளவு பணம் மற்றும் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் என்பதே இந்தப் போட்டியின் போதுதான் தெரிய வருகிறது. இன்று 2011-க்கான ஏலம் நடந்தது. கிரிக்கெட் வீரர்களின் காட்டில் மழைதான். அதிக பட்சமாக இந்திய வீரர் கெளதம் காம்ப்பீர் 11 கோடிக்கு விலை போனார்!. நம் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்கேயோ படித்தது:

வாழ்க்கை வசப்பட...
இன்னும் வாய்ப்புண்டு - முடிந்தவரை பாருங்கள்.
எதிர்ப்பவர் நம் மனிதர்தான் - முடிந்தவரை மோதுங்கள்.
எண்ணமே வாழ்வாகும் - நல்லதை எண்ணுங்கள்.
அனைத்தும் நாளை சரியாகும் - நம்பிக்கை கொள்ளுங்கள்.

Friday, January 7, 2011

கவிதை

“உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே”
பாடிக் கொண்டே கையேந்தினான்
பிச்சைக்காரன்!

கவிதை

உலகத்திடம் உரக்கச் சொன்னேன்
பணம் மட்டும் வாழ்க்கை இல்லையென்று
ஆனால்
உலகம் என்னிடம் இடித்துச் சொன்னது
பணம் மட்டுமே வாழ்க்கை என்று!
இதோ இப்போதே கிளம்பி விட்டேன்
பணத்தை இப்போது சம்பாதிக்கவும்!
பாசத்தை திருவிழாக் கால விடுமுறைகளில் சம்பாதிக்கவும்!

Wednesday, January 5, 2011

தகவல் காப்பான்:

சமீபத்தில் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கையில் ஒரு வலைத்தளம் என் கவனத்தை கவர்ந்தது. முகவரி www.copyscape.com. இத்தளத்தின் பயன் என்னவெனில், நீங்கள் ஒரு தளத்தின் பக்க முகவரியை கொடுத்தால் ( i.e., www.mysite.com/contentpage.html ) போதும், copyscape.com, அத்தளத்தின் content-ஐ மற்ற தளத்தின் content உடன் ஒப்பிட்டு விடும். நீங்கள் உங்கள் அத்தளத்தின் content-ஐ வேறு தளத்தில் இருந்து எடுத்திருந்தால் copyscape.com அத்தளத்தின் முகவரியை பட்டியலிட்டுக் காட்டி விடும். இப்போது copyscape.com தளத்தின் பயன் என்னவென்று தெரிந்திருக்கும்!.