நான் என் அனுபவத்தில் கண்ட சில உண்மைச் சம்பவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு நான் Mr.X என்பவரிடம் பணியாற்றினேன். Mr.X பயங்கர புத்திசாலி. போதாதற்கு மாநில அரசாங்க உத்தியோகம் வேறு. (அதனைப் பெறுவதற்கும் பல தில்லாலங்கடி வேலை. அது தனிக் கதை). ஆகையால், வருமானத்திற்கும் குறைவில்லைதான். சக்கையாக பணியாட்களைப் பிழிந்து வேலை வாங்குவதில் கில்லாடி. அன்பரின் மனைவி கர்ப்பமாக இருந்தார். Mr.X எங்கோ ஒரு ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்க, அவரோ, ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி
அன்றுதான் நல்ல நாள் என்றும் சொல்லி விட, Mr.X ரொம்ப அப்செட். ஒன்றும் இல்லை, ஜோசியர் சொன்ன நாள், குடும்ப டாக்டர் பிரசவத்திற்கு குறித்த நாளுக்கு 3 நாட்கள் முன்னதாக. நம்மவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தாடி வளர்த்துக் கொண்டு, ஏதோ செத்தவன் போல் அலைந்தார். குடும்ப டாக்டரிடமும் போய் 3 நாட்கள் முன்னதாக சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்ட, அவரோ no dates என்று சொல்லவும், மனிதர் டோட்டல் அப்செட். புலம்ப ஆரம்பித்து விட்டார்.
பின்னர், ஒரு நாள் ஈவ்னிங், (ஜோசியர் சொன்ன அதே நாள்) மனைவியை அழைத்துக் கொண்டு (எங்கோ?) சென்றார். (நான் கூட செக்கப் செய்யத்தான் குடும்ப டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார் என நினைத்தேன்). சரியாக 3 மணி நேரம் நம்மவரிடம் இருந்து கழித்து போன் வந்தது. போனில் நம்மவர் நல்ல குஸி மூடில் பேசினார். அவர் சொன்ன விசயம் இதுதான் “குழந்தை பிறந்து விட்டது!”.
No comments:
Post a Comment