Wednesday, November 9, 2011

முதல் திரை விமர்சனம்

சமீப நாட்களாக, என்னால் சரியாக blog எழுத முடிவது இல்லை. என்ன செய்வது என் வேலை அப்படி. எனக்கே மனது கேளாமல் இதோ வந்து விட்டேன். எதைப் பற்றி எழுதுவது?.... இதோ என் முதல் திரை விமர்சனம். சமீபத்தில் ”7ஆம் அறிவு” படம் பார்த்தேன். ஏனோ “கஜினி” போல் ஒரு தாக்கத்தினை இப்படம் ஏற்படுத்தவில்லை. ஆனால் தமிழர்கள் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ள நல்ல பல விசயங்கள் சொல்லப் பட்டுள்ளன. முக்கியமாக போதி தர்மன். முருகதாஸ் அவர்களை இதற்காக இந்தப் பட்டதாரி வணங்குகிறேன். ஏறக்குறைய தமிழகமே மறந்து போன ஒரு தமிழனை அடையாளம் காட்டியதற்கு நன்றிகள் ஆயிரம். சூர்யா எப்பவும் போல் அசத்தல். ஸ்ருதி என்ன ஆச்சு உங்கள் குரலுக்கு? தமிழை மிகவும் கஸ்டப்பட்டு பேசுவது போல் உள்ளது. வில்லனைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஜானி ட்ரி நுயென் நல்ல தேர்வு. நோக்கு வர்மம் concept சூப்பர். ஆனால் வில்லன் அடிக்கடி நோக்கிக் கொண்டே இருப்பது தான் போர். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு அருமை. ஏனோ ஹாரிஸ் இந்தப் படத்தில் சொதப்பிவிட்டதாக எண்ணத் தோன்றியது. பாடல்கள் அனைத்தும் பரவாயில்லை ரகம். தமிழனின் பெருமை சொன்ன விதத்தில் ஏழாம் அறிவு அருமை…..

2 comments:

  1. i want to speak Mr. Francis please mail me my id madhu5537@yahoo.com

    ReplyDelete
  2. வணக்கம். நான் உங்கள் ப்ளோக்கை ரொம்ப நாளாக படித்து வருகிறேன். 7 அம அறிவு திரை விமர்சனம் அருமை, அது மட்டும் அல்ல , நீங்கள் எழுதிய பார்த்தது கதை இன்றைய தமிழகம் சென்று கொண்டிருக்கும் பாதையின் சிறு உதாரணம் என்று நான் எண்ணுகிறேன். உங்கள் ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் நான் ரசித்தேன். உங்களிடம் பேச வேண்டும் என்று ஆசை படுகிறேன். உங்களால் முடிந்தால் பேசவும். நான் காத்திருப்பேன்.

    உங்கள் ரசிகை
    மது
    madhu5537@yahoo.com

    ReplyDelete