Monday, August 22, 2011

அன்னா ஹசாரே

எனது இந்த blog உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள தமிழ் இணைய தள வாசகர்களால் படிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியே! அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அஹிம்சையின் மீது அதிக மதிப்பு உண்டு!. நாட்டின் 2வது சுதந்திர போரினையும்(ஊழலுக்கு எதிரானது) இப்போது மதிப்பிற்குரிய அன்னா ஹசாரே அவர்கள் காந்திய வழியில் நடாத்திக் கொண்டிருக்கிறார். அன்னாரது போராட்டம் வெற்றி பெற இந்த பட்டதாரி வணங்கி வாழ்த்துகிறேன்!.

பார்த்தது!

ம்ம்ம்…. மீண்டும் அந்த auto driver கதைக்கு வருகிறேன். அந்த maruthi கார் ஆசாமி காரினை எடுத்து விட்டு கிளம்பிவிட்டார். ஆட்டோ டிரைவரையும் சேர்த்துக் கொண்டுதான்!. என்ன ஆட்டோ டிரைவர் வெளியே தொங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக அப்போது பார்த்து signal விழுந்தது. அந்த maruthi கார் ஆசாமி காரை நிறுத்தினார். இது நடந்தது சென்னை முகப்பேரில்! இந்த மனிதர்களை நான் என்னவென்பது!. கடைசியாக அந்த auto driver 300 ரூபாய் பணம் வாங்கிக்(பிடுங்கி) கொண்டுதான் விட்டார்!. Auto driver ஆட்டோவுக்கு வந்த உடன் என்னிடம் சொன்னது “இவன் வீட்டுக்கு போவதற்குள் எத்தனை பேரை கொல்லப் போறானோ!”.

Saturday, August 20, 2011

நெப்போலியன் பாரதி!

யார் இவர் என்று கேட்கிறீர்களா? மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன்! Ajith நடித்து வெளிவரப் போகின்ற மங்காத்தா படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கின்றார்!.

Tuesday, August 16, 2011

பார்த்தது!

இன்று என்னவோ எனக்கு மனதே சரியில்லை! Office-ல் இருந்து வரும் போது share Auto-வில் வந்தேன். Share auto- வை பின்னால் வந்த Maruthi zen car இடித்து விட்டது. அதுவும் signal-லில் நிற்கும் போது. நான் driver அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். Driver உடனே கோபத்துடன் இறங்கி வாக்குவாதத்தில் இறங்கினார் அந்த மாருதி கார் driver உடன். அந்த கார் driver சரியான உ.பா. மயக்கத்தில் இருந்தார். காரை விட்டு சார் கீழே இறங்கவே இல்லை. Auto driver- சரி மல்லுக்கு நின்றார் அவருடன். Auto driver ஜன்னல் கதவின் வழியாக பேசிக் கொண்டே நின்றார். இருவருக்கும் கை கலப்பாகி, auto driver ஜன்னல் கதவின் வழியாக தன் கையை வைத்து அவரின் காலரைப் பிடித்து விட்டார். போதை ஆசாமியோ அதனைப் பற்றி கவலைப் படாமல் காரை கிளப்பிவிட்டான்!. Auto driver கை ஜன்னலைப் பற்றிக் கொண்டது.

தொடரும்….