Friday, December 30, 2011
மென்பொருள் பதிவு - 2
Thursday, December 29, 2011
மென்பொருள் - பதிவு
Tuesday, December 27, 2011
சிக்கன் 65-ன் வரலாறு
Tuesday, December 13, 2011
பிரபலங்களின் வீடுகள் – ஒரு பார்வை
மைக்கேல் ஜாக்சனின் வீடு.

பாப் பாடகி (Pop Singer) பிரிட்னி பியர்சின் வீட்டின் வான் வழிக் காட்சி.

ஹாலிவுட் நடிகர் (Hollywood Actor) வில் சுமித்தின் los angels வீடு.

ஹாலிவுட் நடிகை (Hollywood Actress) சாண்ட்ரா புல்லக்கின் வீடு.

ஓப்ரா வின்ப்ரேவின் ஹவாய் பண்ணை வீடு

Titanic புகழ் ஹாலிவுட் கனவு நாயகன்(heartthrob) லியனார்டோ டிகாப்ரியோ வளர்ந்த வீடு.

ஹாலிவுட் நடிகை (Hollywood Actress) ஜெனிபர் அனிஸ்டனின் வீடு. வான் வழி காட்சி (Aerial View).

ஹாலிவுட் நடிகர் (Hollywood Actor) ஜார்ஜ் குலூனியின் 1.76 மில்லியன் மதிப்புள்ள வீடு.

முகேஷ் அம்பானியின் 27 மாடி குடியிருப்பு. 3 ஹெலிஹாப்டர் இறங்கும் வசதி, 160 கார்கள் நிறுத்தும் வசதி கொண்டது.

சச்சின் புதிதாக கட்டியுள்ள வீடு இது… மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது.

Sunday, December 11, 2011
விலை ஏற்றம்!
சமீபத்தில் தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டணங்கள் விலை ஏற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதைப் பற்றி தான் இங்கு அலசப் போகிறேன். பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து துறையும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் நஸ்டத்தில் இயங்குவதால்தான் இந்த விலை உயர்வு என்று நமது முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் அவர்களுக்கு சாமானிய மக்களின் அவஸ்தைகள் புரிவதில்லை என்று நினைக்கிறேன். என்றாவது ஒரு நாள் பஸ்ஸில் போயிருந்தால் ஒரு வேளை நமது கஸ்டம் புரியும் என எண்ணுகிறேன். ஆவின் பாலையாவது குடித்திருப்பாரா என்ன? கடவுளுக்கே வெளிச்சம். ”அவருக்குத்தான் கொட நாடு எஸ்டேட் இருக்கேப்பா? என்னத்துக்கு இது எல்லாம்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் ஒரு முதல்வர் நினைத்தால் எதனையும் செய்ய முடியாதா? ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்துதான் பாருங்களேன் முதல்வரே. அப்போதுதான் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சரின் லட்சணமும் உங்களுக்குத் தெரியும். உடனே அமைச்சரின் இலாகாக்களை மாற்றி மாற்றி விளையாடலாம். அதுதானே உங்களுக்கு பிடித்த விளையாட்டு ஆயிற்றே!. நமக்கு பொதுத்துறை நிறுவனம் எப்படி போனால் என்ன? என்ன முதல்வர் அவர்களே சரியா? இல்லையெனில் இப்படி செய்யலாம், எதிர்கட்சியினர் முந்தைய ஆட்சியில் (தெரியாத்தனமாக) செய்த நல்ல திட்டங்களை அதாவது நூலகத்தை இடித்து மருத்துவமனையாக்குவது, கல்வித்திட்டங்களை கலைப்பது போன்ற விளையாட்டுக்கள். ஏற்கனவே நான் போக்குவரத்து துறையின் அவலங்கள் பற்றி எழுதியிருந்தேன். அந்த அவலங்களைப் போக்கினாலே போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கும்.
Saturday, November 26, 2011
அரசியல்வாதிகளுக்கு,
என் அருமை அரசியல்வாதிகளுக்கு,
இந்தப் பதிப்பு ஒரு சாதாரண மனிதனின் எண்ண ஓட்டங்களே. என் கேள்விகள் நியாயம் என்று தெரிந்தால் யாராவது பதில் சொல்லுங்கள்.
ஏன் எந்த அரசியல்வாதியும் வாரம் ஒரு முறை மக்களை சந்திக்கக் கூடாது.?
ஒரு அரசியல்வாதியின் ஒரு நாள் அலுவல் என்ன?
உங்கள் பதவியின் காலம் அதிகபட்சம் 1865 நாட்கள், அதில் 520 நாட்கள் விடுமுறை என்று கொண்டாலும், 1345 நாட்களில் என்ன அல்லது எத்தனை நல்ல காரியங்கள் உங்கள் தொகுதிக்கு செய்தீர்கள்?
Thursday, November 24, 2011
விழுந்தது அறை!
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சரத்பவாருக்கு பப்ளிக்கில் நல்ல பதிலடி கிடைத்திருக்கிறது. இந்த அறை ஏதோ ஒரு சாமானியனின் அடி மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்தியர்களின் அறை. நான் ஒன்றும் அறைந்த அந்த சகோதரனுக்கு வக்காளத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். “பாழாய் போன அரசியல்வாதிகளே! எங்களைப் பற்றி நினைக்கிறீர்களா? இல்லையா?” எனும் ஒரு கேள்வியாகக் கூட இந்நிகழ்வினை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்ளலாம். நன்றாக நினைத்துப் பாருங்கள் எத்தனை முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு?. எத்தனை ஆயிரம் கோடி ஊழல்? இதை எல்லாம் தட்டிக் கேட்க விழுந்த முதல் அடியாகக் கூட இதைப் பார்க்கலாம். அரசியல்வாதிகளே! சமீபத்தில் நடந்த ஆப்ரிக்க புரட்சி நினைவிருக்கிறதா? இந்நிகழ்வு பற்றி காந்தியவாதி அன்னா ஹசாரேவிடம் கேட்கப்பட்ட போது ஹசாராவே இப்படித்தான் கேட்டார் “Just One Slap?”.
Wednesday, November 16, 2011
Computer Engineers - நியாயமான ஒரு கேள்வி
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்ன தான் வேலை பார்ப்பீங்க ?" –
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்."வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவுசெய்ய தயாரா இருக்கேன். எனக்கு இதசெய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"சரி"
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ணமுடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்கவேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுலயாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னுநமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliverபண்ணுவோம். அதபாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அதுவேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raiseபண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-னா?"
"Change Request. இதுவரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?"
"ஒத்துகிட்டுதான் ஆகணும். முடிவெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், பெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார்.
"நாங்க என்னதப்பு பண்ணினாலும் இவரபார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழிபறிப்பானுடென்ஷன்ஆகி டயர்ட்ஆகுறதுதான் இவரு வேலை."
"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோடபிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க.. டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும்போதே"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்திலதிருநீறு பூசி என்னைய அனுப்பி வச்ச மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி." "ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"அது எப்படி.? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான். இதுவரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."
"அப்புறம்?"
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"அப்புறம்?"
"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.
"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."
Friday, November 11, 2011
கேட்டது
அரசு போக்குவரத்து துறை பற்றி…
இந்தப் பதிவு தேவையா?… இல்லையா?… எனக்கு தெரியவில்லை. ஆனால் அரசாங்க இயந்திரத்தின் ஒரு அச்சாணியாய் திகழும் போக்குவரத்து துறை பற்றி ஒரு Bus பயணத்தின் போது ஒரு நண்பருடன் அளவளாவ சந்தர்ப்பம் வாய்த்தது. நான் எனது சொந்த ஊருக்கு போய்க் கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த bus அது. நான் சந்தித்த அந்த நபருக்கு சுமார் 50 வயதுக்கு மேல் இருக்கும்.
என் பக்கத்தில் அமர்ந்த அவர் என்னுடன் பேச ஆரம்பித்ததும், நானும் பேச ஆரம்பித்தேன். பேச்சு அப்படியே போக்குவரத்து துறை பற்றி வந்தது. நான் போனது bus என்றாலும் கூட ஏதோ roller coaster-ல் போனது போன்று மயக்கம்தான் வந்தது. அதாவது அவர் போக்குவரத்து துறையின் முறைகேடு பற்றி பேச ஆரம்பித்தவுடன்.
- · போக்குவரத்து துறையில் நல்ல வருமானம் வந்த போது கூட போக்குவரத்து பணிமனையில் பேருந்தினைப் பராமரிக்க போதுமான அளவு ஊழியர்கள் இல்லை.
- · போக்குவரத்து துறையில் driver, conductor வேலைக்கு திறமையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பணம் மட்டும் போதும்!!! ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் வேறுபடுமாம்… J
- · இவ்வாறு வாங்கப் படும் லஞ்சம், சதவிகித அடிப்படையில் பிரித்துக் கொள்ளப் படுமாம்.
- · அது மட்டும் அல்ல போக்குவரத்து துறையின் உதிரி பாகம் வாங்குவதில்தான் அதிகாரியின் (லஞ்சம்) வாங்கும் சதவிகிதம் அதிகம். Quality பற்றி எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லையாம்.
ம்ம்ம்… என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை… என் நண்பர் என்று சொன்னேன் அல்லவா! அந்த நண்பர் வேறு யாருமல்ல அந்த பேருந்தின் நடத்துனர் (Conductor)!!!!!!!!.
எங்கே போய் நாம் முட்டிக் கொள்ள… :(