சமீபத்தில் தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டணங்கள் விலை ஏற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதைப் பற்றி தான் இங்கு அலசப் போகிறேன். பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து துறையும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் நஸ்டத்தில் இயங்குவதால்தான் இந்த விலை உயர்வு என்று நமது முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் அவர்களுக்கு சாமானிய மக்களின் அவஸ்தைகள் புரிவதில்லை என்று நினைக்கிறேன். என்றாவது ஒரு நாள் பஸ்ஸில் போயிருந்தால் ஒரு வேளை நமது கஸ்டம் புரியும் என எண்ணுகிறேன். ஆவின் பாலையாவது குடித்திருப்பாரா என்ன? கடவுளுக்கே வெளிச்சம். ”அவருக்குத்தான் கொட நாடு எஸ்டேட் இருக்கேப்பா? என்னத்துக்கு இது எல்லாம்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் ஒரு முதல்வர் நினைத்தால் எதனையும் செய்ய முடியாதா? ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்துதான் பாருங்களேன் முதல்வரே. அப்போதுதான் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சரின் லட்சணமும் உங்களுக்குத் தெரியும். உடனே அமைச்சரின் இலாகாக்களை மாற்றி மாற்றி விளையாடலாம். அதுதானே உங்களுக்கு பிடித்த விளையாட்டு ஆயிற்றே!. நமக்கு பொதுத்துறை நிறுவனம் எப்படி போனால் என்ன? என்ன முதல்வர் அவர்களே சரியா? இல்லையெனில் இப்படி செய்யலாம், எதிர்கட்சியினர் முந்தைய ஆட்சியில் (தெரியாத்தனமாக) செய்த நல்ல திட்டங்களை அதாவது நூலகத்தை இடித்து மருத்துவமனையாக்குவது, கல்வித்திட்டங்களை கலைப்பது போன்ற விளையாட்டுக்கள். ஏற்கனவே நான் போக்குவரத்து துறையின் அவலங்கள் பற்றி எழுதியிருந்தேன். அந்த அவலங்களைப் போக்கினாலே போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கும்.
No comments:
Post a Comment