Friday, July 4, 2014

தண்ணீர் தண்ணீர்்

இரண்டு நாட்களாக நான் இருக்கும் காம்பவுண்டில் தண்ணீர் பிரச்சினை. டவுசர் கழண்டு போச்சு. (உண்மையில் கிழிஞ்சே போச்சுப்பா!!!!) இன்னும் மோட்டர் சரி பண்ணப் படவில்லை. கிரவுண்ட் புளோரில்  இருந்து 2வது மாடிக்கு தண்ணீர் குடத்தை தூக்கி வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. so sad. ஹவுஸ் வோனர் வரவே இல்லை. என்னமோ போடா மாதவா. நமக்கே இப்படின்னா விவசாயின் நிலையை யோசித்தால் தலை கிறு கிறுவென்கிறது. அரும்பாடுபட்டு விதைத்து, தண்ணீர் கிடைக்கப் பக்கத்து மாநிலத்துக்காரனிடம் போராடி, கிடைத்த தண்ணீரை வைத்து விவசாயம் பார்த்து.... என்னமோ போடா மாதவா!!!

Saturday, May 25, 2013

மீண்டும்...

யப்பா...  போன வாரம் தான்  "சூது கவ்வும்" படம் பார்த்தேன்.
நல்ல ரசனையான படம். விஜய சேதுபதிக்கு மீண்டும் வாழ்த்து
க்கள். நலன் குமரசாமிக்கும்தான்.பாலாவின் கானாவிற்கு தியேட்டர் அதிர்கிறது.  மொத்தத்தில் சூது கவ்வும் நிச்சயம் பார்ப்பவர்ககளின்மனதையும் கவ்வும்.

Monday, January 7, 2013

ஹைக்கூ

பாவம் செய்பவர்களை
மன்னிப்பவன் இறைவன் என்றால்
பாவம் செய்யத்தூண்டும்
சாத்தானையும் மன்னிப்பானாக!!!!

Saturday, January 5, 2013

நினைவுகள்


இப்போதுதான் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு சிவாஜியின் பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கடையில் வேலை செய்யும் ஒருவர் “அண்ணே ! இந்தப் பாட்டுதான் எங்க ஊரு சினிமாத்தியேட்டருல நைட் சோவுக்கு முன்னாடி போடற கடைசி பாட்டு” என்றார். நான் நினைத்துக் கொண்டேன் நம்மலப் போலவும் ஆட்கள் இருக்காங்க இந்த ஊரில் என்று நினைத்துக் கொண்டேன். சென்னை பல நேரங்களில் மிரட்டினாலும், சில நேரங்களில் சிலாகித்து மகிழவும் வைத்து விடுகிறது. நினைவுகளுக்குத்தான் எத்தனை சக்தி!.
போன வாரம் தான், அழகேசன் போன் செய்தான். குரலை மாற்றிக் கொண்டு பேசினான். அதுவும் ரியல் எஸ்டேட் சம்பந்தமான ஆள் போல பேசினான். குரலைக் கேட்டதும் எனக்குள் அழகேசனின் நினைவுகள் மின்னலாய் வந்து போனாலும் அவனா என்ற சந்தேகத்துடனே பேசினேன். எல்லாம் ஆங்கிலத்தில் பேசிய பின் கடைசியாக  “டேய் ! எப்படிடா இருக்க? நான் தான் அழகேசன் பேசுறேன்! “ என்றான். “டேய் ! எனக்கு அப்பவே ஒரு டவுட் தான். இருந்தாலும் விட்டுடேன்” என்ற படி அளவளாவிக் கொண்டிருந்தேன். அழகேசன் படித்தது எம்பிஏ. ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா நிலைகளிலும் வேலை பார்த்து இருக்கின்றான். நல்ல எண்ணம் கொண்டவன். சில சமயங்களில் வெள்ளந்தியாய் இருப்பான். அவனைப்பற்றிய நினைவுகளுக்கு அவன் செயல்பாடுகளே காரணம். இன்னும் நிறைய பேர் பற்றிய நினைவலைகள் என்னுள் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன என்னுள். சத்யா , ஸ்ரீதர், கமல் ,மணிவண்ணன், விமல், புகழ், சுபாஸ் , கவி இவர்கள் எல்லோரும் என்னுள் ஒரு முறையேனும் இவர்களுடைய நினைவுகளால் என்னுள் எட்டிப் பார்த்து விடுவார்கள். டாக்டரிடம் செக்கப்புக்குப் போனால், அவர் எங்க ஊர் ரெங்கராஜ், தர்மராஜ் டாக்டரை நினைக்கச் செய்கிறார். தர்மராஜும், ரெங்கராஜும் பீஸ் அதிகம் வாங்க மாட்டார்கள். சென்னையிலோ, நான் போன டாக்டர், கன்சல்ட் பீஸ் மட்டும் 150 வாங்குகிறார். இன்னும் சில இடங்களில் 300 ரூபாயாம். தர்மராஜும், ரெங்கராஜும் ஏதேனும் மருத்துவமனைகளைக் கண்டாலெ நினைவாடுகின்றனர்.
எப்எம்மில் ஏதேனும் பழைய பாடல் கேட்டால், 1998 களில் என் ஊரில் இடிக்கப்பட்ட பாலாஜி டூரிங் டாக்கீஸ் சொற்ப நொடிகளில் என் நினைவுகளில் கட்டப்பட்டு விடுகிறது. அங்கே பட இடைவேளைகளின் போது தின்னப்பட்ட கடலை மிட்டாயும், முறுக்கும் நினைவின் நாசியினை உரசிச் செல்கின்றன. இப்படி இன்னும் சொல்லவும், மெல்லவும் முடியாத நினைவுகள் ஏராளம்.
கஷ்டப்பட்டு உழைத்து காசு வாங்குபவனைப் பார்த்தும், ஏமாற்றி காசு வாங்குபவனைப் பார்த்தும் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி ஒரே மாதிரி சிரிப்பதைப் போன்றே நினைவுகளும் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு நம்மைப் பார்த்து எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்றன.

Wednesday, August 1, 2012

ஹைக்கூ


ஹைக்கூ:
எதிர்க் கட்சித் தலைவரும்
ஆளுங்கட்சித் தலைவரும் ஒன்றாய் !
சுவரில் தேர்தல் விளம்பரம்!!!

Monday, July 23, 2012

ப்ளெக்ஸ் பேனரும் – தமிழ் மக்களும்


                                     கடந்த 5 வருடங்களாக தமிழ் நாட்டில் ”ப்ளெக்ஸ் கலாச்சாரம்” (Flex Culture) என்று சொல்லும் அளவிற்கு ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப் படுகின்றன. முந்தைய நாட்களில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. அதுவும் ஏதாவது ஒரு திருவிழா அல்லது மண விழா காலங்களில் மட்டும்.இப்போது ஏன் எதற்கு என்றே தெரியாமல் ப்ளெக்ஸ் வைக்கப்படுகின்றது.

Friday, July 20, 2012

டுவிட்டுகள்


ஃபேஸ் புக்கை சுற்றி வந்த போது கண்ட சில சொல்வடைகள்:

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது..!!
 ////////////////////////////////////////
பிரபுதேவாவை விட்டு பிரிந்தார் நயன்தாரா #
இப்போ கேளுங்க டா யார் அடுத்த பிரபுதேவான்னு..:-);-)
 //////////////////////////////////////// 

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல்நம்மை காப்பாற்றுகிறது .
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்து க் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்..:-):-)
  ////////////////////////////////////////

இதயத்தின் துடிப்பை கூட
உணர்ந்து விட முடிகிறது
முடியாதது மனதின்
அழுகை மட்டுமே..!!
  ////////////////////////////////////////
அப்பாக்களின் அன்பு, பலாப்பழம் போன்றதே! உள்ளிருக்கும் இனிப்பினை, நாம் அவ்வளவு எளிதில் உணர முடிவதில்லை..!!
  ////////////////////////////////////////

ரூபாய் நோட்டுகளில் தேச தலைவர்கள் படங்கள் - ரிசர்வ் பேங்க் முடிவு...

#
சத்திய சோதனை..;-(
 ////////////////////////////////////////