வணக்கம் நண்பர்களே!
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பதிப்பு! இடைப்பட்ட நாட்களில் துன்பமும், இன்பமும் கலந்தே வந்தது. அதுதானே வாழ்க்கை. பல நல்ல பாடங்களும் கற்க முடிந்தது. வாழ்க்கைக்கு நன்றி!. ஒரு சிறு போராட்டத்திற்குப் பிறகு ஓர் நல்ல மென் பொருள்(Software) நிறுவனத்தில் வேலைக்கு (கடந்த மார்ச் மாத துவக்கத்தில்) சேர்ந்தாயிற்று. அதுவும் யாருடைய தயவும்(Recommendation) இன்றி. (சேர்ந்த ஏழே நாட்களில் Annual Meet நிமித்தம் beach resort vacation வேறு!) என் நண்பர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். (வேறு யார் Bombay சத்யா, Bombay பாண்டியராஜ், lollyGaam கவியரசு மற்றும் Pattukootai சிரிதரும் தான்). நல்ல ஊக்குவிப்பு. நன்றி நண்பர்களே!. மிகவும் சந்தோசமான தருணங்கள்!.